'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆன்லைனில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 4 பணிகளுக்கான போட்டி தேர்வு, கடந்த ஆண்டு, செப்., 1ல் நடந்தது. மாநிலம் முழுவதும், 5,600 மையங்களில் நடந்த தேர்வில்,
16.30 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், ஜூன், 16ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பதவிக்கும் தேர்ச்சி பெற்றவர்களின் வரிசை எண் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, இன்று முதல், வரும், 18ம் தேதி வரை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தமிழக அரசின் கேபிள், 'டிவி' நடத்தும், சேவை மையங்கள் வாயிலாக, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.