Thursday, December 5

மாநில ஓவிய போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி

 மாநில ஓவிய போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி

ஈரோடு, திங்களூர் அரசுப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி தீபிகா, ஓவியப் போட்டியில், மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.


மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 'பவர் கிரிட் கார்ப்பரேஷன்' சார்பில், எரிசக்தி சேமிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும், பள்ளி அளவில் ஓவியப் போட்டி நடந்தது.நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை, 'ஏ' பிரிவாகவும், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'பி' பிரிவாகவும் போட்டி நடந்தது. சிறந்த, 50 ஓவியங் களை வரைந்த, மாணவ - மாணவியர், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த, மாநில ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.'ஏ' பிரிவில், ஈரோடு மாவட்டம், திங்களூர், எம்.பி.டி., அரசு மேல்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி தீபிகா, முதலிடம் பிடித்தார். மாணவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, தீபிகா, டில்லியில் வரும், 12ம் தேதி நடக்கும், தேசிய ஓவியப் போட்டியில் பங்கேற்கிறார்.
Auto Scroll Stop Scroll