Friday, November 22

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதில், 'ஷூ'

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, இலவச காலணிக்கு பதில், 'ஷூ' வழங்க, தமிழக அரசு ஆணை பிறப்பித்துஉள்ளது. 


தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, இலவச உதவிகள் வழங்கப்படுகின்றன.இதில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவி யருக்கு, இலவச காலணிகள் வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், காலணிகளுக்கு பதில், தனியார் பள்ளிகளை போல, 'ஷூ'க்கள் வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துஉள்ளது.

அதாவது, வரும் கல்வி ஆண்டு முதல், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ஷூ மற்றும் சாக்ஸ்' மட்டுமே வழங்கப்படும் என, அரசு உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ள, 23.45லட்சம் மாணவர்களுக்கு, வரும் கல்வி ஆண்டில், ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும். இதற்காக, 8.82 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். அதேபோல, நடுநிலைப் பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 5.70 லட்சம் மாணவ - மாணவியருக்கும், ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். இதற்கு, 2.08 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மொத்தம், 67 கோடி ரூபாய் செலவில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
source:Dinamalar
Auto Scroll Stop Scroll