தமிழகத்தில் உள்ள கோவில், பள்ளிகளில் விற்கப்படும் உணவுகள் தர கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.உணவு மாதிரிகளை பரிசோதிக்க தமிழக உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.நாட்டில் உள்ள உணவகங்களை வரன்முறை செய்யவும் மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.உணவகங்கள் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விற்கப்படும் பிரசாதம் பொருட்கள் அனைத்தும் தர நிர்ணய கட்டுப்பாட்டு ஆணையத்திற்குள் உணவு பாதுகாப்பு துறை கொண்டு வந்துள்ளது.கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்குவதற்காக அறநிலைய துறை குழு அமைத்துள்ளது.
அதேபோல பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தண்ணீர் ஆகியவையும் தர நிர்ணயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:மக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அதனால் கோவில் பிரசாதம் முதல் குடிநீர், அன்னதானம் வரை அனைத்தையும் பரிசோதிக்கும் பணி துவங்கியுள்ளது.அதேபோல பள்ளி கல்லுாரி வளாகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் துரித உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசு அலுவலகம் முதல் தனியார் அலுவலகம் வரை ஒரு நாளைக்கு ஐந்து இடங்களில் சோதனை நடத்தவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது, என்றனர்.