Wednesday, November 20

பொதுத்தேர்வில் சாதிக்க தூண்டும், 'சக்சஸ் மந்த்ரா'

புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வாழ்க்கையிலும் சாதனை படைக்க தேவையான யுக்திகளை அள்ளித்தரும், 'சக்சஸ் மந்த்ரா' எனும் நிகழ்ச்சியை, 'தினமலர்'நாளிதழ், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது. வரும், 30ம் தேதி, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.


நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டத்தின் முக்கியத்துவம், அணுக வேண்டிய முறை, நுழைவுத் தேர்வுகளுக்கு, புதிய பாடத்திட்டத்தை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்படும்.மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்பதன் பலன்கள், படிக்கும்போதே கிரியேட்டிவ் சிந்தனைகளை வளர்ப்பதன் அவசியம், சுயகற்றல் மற்றும் ஆழ்ந்த கற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், க்யூ.ஆர். கோடு பயன்படுத்தும் வழிமுறை குறித்து, மாணவர்கள், நிகழ்ச்சியில் தெளிவு பெறலாம்.சுவாரஸ்யம் குறையாமல் பாடங்களை படிக்கும் விதம், உடல்நலம் மற்றும் மனநலம் காக்கும் வழிமுறைகள், புதிய பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வு வினாக்கள் கேட்கப்படும் விதம் ஆகியவை மட்டுமின்றி, தேர்வுக் களத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

குறித்த நேரத்தில் தேர்வை சுலபமாக எழுதி முடிப்பது பற்றியும், பயத்தை களைந்து, தேர்வில் சாதிப்பதற்கான ரகசியம் குறித்தும், நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்கள் அறியலாம்.புதிய பாடத்திட்ட தயாரிப்பு குழுவைச் சேர்ந்த வல்லுனர்கள், அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவன பேராசிரியர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர். இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கேற்கலாம். காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்கும் அனைத்து மாணவ - மாணவியருக்கும், முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.வெற்றிக்கான ரகசியங்களை அறியும் இந்த அற்புத நிகழ்ச்சியில் பங்குபெறுங்கள்! பொதுத்தேர்வில் மட்டு மின்றி, வாழ்க்கையிலும் சாதனையாளர் ஆகுங்கள்!


எங்கு... எப்போது?

திருத்தணியில், நவ., 23 சனிக்கிழமை, இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், திருத்தணி

 காஞ்சிபுரத்தில், நவ., 24 ஞாயிற்றுக்கிழமை,இடம்: அன்னை அஞ்சுகம் கல்யாண மண்டபம்,காஞ்சிபுரம்

சென்னையில், நவ., 30 சனிக்கிழமை,இடம்: கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம், சென்னை

திருவள்ளூரில், டிச., 1 ஞாயிற்றுக்கிழமை, இடம்: சாந்தி மண்டபம், ஆயில் மில், திருவள்ளூர்.



முன்பதிவு துவக்கம்!


'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் பங்கேற்க, மாணவ - மாணவியர், தங்கள் பெயர், மொபைல் எண் ஆகியவற்றை, 98409 45684, 90804 40667 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது வாட்ஸ் ஆப் அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
Auto Scroll Stop Scroll