Friday, November 22

தற்காலிக ஊழியர்களுக்கும் 9 மாத மகப்பேறு விடுப்பு

'மகப்பேறு காலத்துக்கான சம்பளத்துடன் கூடிய, ஒன்பது மாத விடுமுறையை, ஒப்பந்த மற்றும் தற்காலிகஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்' என, பள்ளி, கல்லுாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 



தமிழகத்தில், அரசு ஊழியராக பணியாற்றும் பெண்களுக்கு, மகப்பேறு காலத்தின் போது, ஆறு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது நடைமுறையில் இருந்தது.இந்த விடுமுறை, ஒன்பது மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், ஒன்பது மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறையை, அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, பள்ளி, கல்லுாரிகளுக்கும், பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, இந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டுஉள்ளது.இது குறித்து, அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும், அது சார்ந்த அலுவலகங்களுக்கும், அரசின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும், ஒன்பது மாதம் சம்பளத்துடன் கூடிய, மகப்பேறு கால விடுமுறை அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டுஉள்ளது.
source:Dinamalar
Auto Scroll Stop Scroll