Tuesday, October 15

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து

2019ம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 14) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், டில்லி நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். இதற்கு தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Auto Scroll Stop Scroll