Tuesday, September 17

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு:புதிய அட்டவணை வெளியீடு

10-ம் வகுப்பு தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணை வெளியானது. ஏற்கனவே மார்ச் 17 முதல் ஏப்ரல் 9 வரை பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்த நிலையில், தமிழ், மற்றும் ஆங்கிலம் போன்ற மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதன்படி மார்ச் 27 முதல் ஏப்., 13 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே 4ல் வெளியிடப்படும். இதனை அரசு தேர்வு இயக்குநர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மார்ச்-27-மொழிப்பாடம்
மார்ச் -28-விருப்பமொழி
மார்ச்-31-ஆங்கிலம்
ஏப்.,-3-சமூக அறிவியல்
ஏப்.,-7-அறிவியல்
ஏப்.,-13-கணிதம்
Auto Scroll Stop Scroll