Saturday, August 17

ஆசிரியர்கள் 'ஹெல்மெட்' அணிய உத்தரவு

ஆசிரியர்கள், மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வரும்போது, கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழக மோட்டார் வாகன சட்டத்தின்படி, 18 வயதுக்கு குறைவாக உள்ள மாணவர்கள், 'டிரைவிங் லைசன்ஸ்' இல்லாமல், வாகனங்களை ஓட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும், மோட்டார் சைக்கிளில், பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம்.ஆசிரியர்கள் அனைவரும், பள்ளிகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வருவதாக இருந்தால், கட்டாயமாக, 'ஹெல்மெட்' அணிந்து வர வேண்டும். 

இதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, ஆசிரியர்கள் திகழ வேண்டும்.பஸ்களில், படிக்கட்டில் தொங்கும் அளவுக்கு, மாணவர்கள் செல்வதை தடுக்க, இடைவெளி விட்டு, மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியே அனுப்பவேண்டும்.பள்ளிகளுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, தினமும் போக்குவரத்து ஒழுங்குமுறைப்படுத்தும் பணி வழங்க வேண்டும்.காலை வழிபாட்டு கூட்டத்தில், போக்குவரத்து விதிகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், விளக்க வேண்டும்.இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll