Friday, April 5

'டெட்' தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த ஆண்டுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பிப்ரவரி, 28ல் அறிவித்தது.



தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச், 15ல் துவங்கியது; இன்று முடிய உள்ளது. கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படாது; இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Auto Scroll Stop Scroll