Wednesday, March 13

மார்ச் 29ல் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம்

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல் துவங்க உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில்பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. 


லோக்சபா தேர்தல்ஏப்.18ல் நடக்க உள்ளதால்விடைத்தாள் திருத்த பணிகளை விரைந்து முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதையொட்டி தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதன்படி பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கானமொழி பாடங்களின் விடைத்தாள் திருத்தம்வரும்29ல் துவங்க உள்ளது. 

முதல் நாளில் தலைமை மதிப்பீட்டாளரும்வரும்30 முதல்ஏப்.6 வரைமுதுநிலை ஆசிரியர்களும் திருத்தம் செய்ய உள்ளனர். ஏப்.11க்குள் விடைத்தாள் திருத்தத்தை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Auto Scroll Stop Scroll