Friday, January 25

போராட்டம் தொடரும் :ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் தாஸ் அளித்த பேட்டி:போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. போராட்டம் தொடரும். மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் நடத்தப்படும். நாளை உயர்மட்ட குழு கூட்டம் நடக்கும். 28ம் தேதி முதல் போராட்டம் மறுவடிவம் பெறும், என்றார்.


'போராட்டத்தை வாபஸ் பெறுவீர்களா' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ''வரும், 28ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது உரிய முடிவு எடுப்போம்,'' என்றார்.ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள்,நேற்று பகல் உணவு இடைவேளையின் போது தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் தலைமையில் கோட்டை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Auto Scroll Stop Scroll