Tuesday, January 22

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு;இன்று விசாரணை

போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு'ஜாக்டோ - ஜியோ' நடத்தும் போராட்டத்துக்கு, தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.


சென்னையை சேர்ந்த, பிளஸ் ௧ மாணவன் கோகுல் சார்பில், அவரது தந்தை, ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், காலவரையற்ற போராட்டத்தில், ஜாக்டோ - ஜியோ ஈடுபடுகிறது. மார்ச் மாதம், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடக்க உள்ளன. பிப்., 6ம் தேதி, செய்முறைத் தேர்வு துவங்க உள்ளது.மாணவர்களின் எதிர்காலத்தை, பொதுத் தேர்வுகள் தான் முடிவு செய்கின்றன. இந்நிலையில், காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து, அரசுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நேற்று பகல், நீதிபதி, டி.ராஜாவிடம், மனுவை அவசரமாக விசாரிக்கும்படி, வழக்கறிஞர் நவீன் கோரினார். ஜாக்டோ - ஜியோ சார்பில், வழக்கறிஞர், என்.ஜி.ஆர்.பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை, இன்று விசாரிப்பதாக, நீதிபதி ராஜா தெரிவித்தார்.
Auto Scroll Stop Scroll