Thursday, November 29

இன்று மூன்று மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம்

மூன்று மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் எச்சரித்துஉள்ளது.வட கிழக்கு பருவ மழை, ஒரு வாரமாக வலுவிழந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும், வெயில் அளவு அதிகரித்து உள்ளது. பகலில் மிதமான வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், கடும் குளிரும் நிலவுகிறது. இந்நிலையில், டிச., 6ம் தேதி வரை, மந்தமான நிலையே காணப்படும் என்றும், சில இடங்களில், திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இம்மையம் கூறியுள்ளதாவது:நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தின் எந்த பகுதியிலும், மழை பெய்யவில்லை. ஆனால், தெற்கு கடலோர மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால், திடீர் கன மழை பெய்யலாம். திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய, அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.
Auto Scroll Stop Scroll