Monday, October 8

பள்ளியை மூட வேண்டாம் :சவுதி மாணவர்கள் டுவிட்டரில் சுஷ்மாவுக்கு வேண்டுகோள்

சவுதியில் இயங்கி வரும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவரஜ்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐ.ஐ.எஸ்.ஜெ., என்றழைக்கப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. பள்ளியில் மாணவிகள் பிரிவு தனியாகவும், மாணவர்கள் பிரிவு தனியாகவும் செயல்பட்டு வருகிறது.இதில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 



தற்போது இப்பள்ளியின் மாணவர்கள் பிரிவு இயங்கி வரும் கட்டடம் குறித்த பிரச்னையில் சவுதி நீதிமன்றம் வரும் 9-ம் தேதிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 3,300 மாணவர்கள் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு ஆன்லைன் மூலம் மனு செய்திருந்தனர். மேலும் 1,800க்கும் மேற்பட்டோர் அமைச்சருக்கு டுவிட்டரில் நேரிடையாக கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவில் இந்திய பள்ளியின் மாணவர்கள் பிரிவு நிரந்தரமாக மூடப்பட வில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் . என கூறப்பட்டிருந்தது.
Auto Scroll Stop Scroll