Friday, September 21

நவ.27 முதல் வேலை நிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சிவகங்கை, 'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27 முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக,' ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.மாவட்ட உயர்மட்டக் கூட்டம் சிவகங்கையில் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் தலைமையில் நடந்தது. மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர் பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:


 கோரிக்கைகளை வலியுறுத்தி 2017 ஜூலை 18 ல் துவங்கிய போராட்டம், இன்றும் தொடர்கிறது. அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை கூட நிறைவேற்றாத அரசாக உள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர், ஊராட்சி செயலர், ஊர்புற நுாலகர், பகுதிநேர ஆசிரியர், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 4ல் தற்செயல் விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அக்., 13 ல் வேலைநிறுத்த மாநாட்டை சேலம் முதல்வர் இல்லம் முன், நடத்த உள்ளோம். நவ., 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம், என்றனர்.
Auto Scroll Stop Scroll