Wednesday, July 4

M.E, M.Tech.,மாணவர் சேர்க்கை, 6 முதல் 'ஆன்லைன்' பதிவு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுநிலை, எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை பதிவு, 6ம் தேதி துவங்குகிறது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் ஆகியவற்றில் சேர, தமிழக அரசின் பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஏற்கனவே முடிந்த நிலையில், மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


முதுநிலை படிப்புகளுக்கு, வரும், 6ம் தேதி முதல், விண்ணப்ப பதிவு செய்யலாம். அண்ணா பல்கலையின், www.annauniv.edu/tanca 2018 என்ற இணையதளத்தில், வரும், 17ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், நாகராஜன் அறிவித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll