Thursday, June 7

பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுக்கு, 'தத்கல்'

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு, தத்கலில், வரும், 11, 12ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு, இம்மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஏற்கனவே முடிந்து விட்டது.


வாய்ப்பை தவறவிட்டவர்கள், தத்கல் சிறப்பு திட்டத்தில், வரும், 11 மற்றும், 12ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலங்களுக்கு சென்று பதிவு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Auto Scroll Stop Scroll