Thursday, June 28

மருத்துவ படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.அரசு மற்றும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இவர்களுக்கான தரவரிசை பட்டியல், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், இன்று காலை, 9:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறார். முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் கூறுகையில், ''மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியிட, உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதிக்கவில்லை. திட்டமிட்டபடி, இன்று தரவரிசை பட்டியல்வெளியிடப்படும்,'' என்றார்.
Auto Scroll Stop Scroll