Sunday, June 10

நாளை முதல், 'தினமலர்' மாணவர் பதிப்பு!!!

மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 'தினமலர்' மாணவர் பதிப்பு, ஜூன் 11 முதல் வெளிவர உள்ளது.பள்ளி மாணவர்களுக்காக, அவர்களது பாடத்திட்டத்தை ஒட்டி, இந்தப் பதிப்பு, திங்கள் முதல் வெள்ளி வரை வெளிவருகிறது. தமிழ் மொழியில் வெளியாகும் முதல் மாணவர் நாளிதழ் இது.



பொது அறிவு செய்திகள், அறிவியல் ஆச்சரியங்கள், கணிதம், மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பகுதி, வரலாறு, பல்துறை கட்டுரைகள் என, ஏராளமான பக்கங்கள் இடம் பெற்று வருகின்றன. மாணவர் பதிப்பு, பொது விற்பனைக்கு அல்லாமல், பள்ளிக் கூடங்கள் வாயிலாக மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


விளம்பர, வணிக நோக்கத்தை விட, மாணவர் நலனை முதன்மைக் கொள்கையாகக் கொண்டு வெளிவரும் மாணவர் பதிப்பு, மாணவர்களிடையேயும், ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

'தினமலர்' மாணவர் பதிப்பு வாசகரான, கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை, ஆர்.எம்.கே.,மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாணவியான, தி.சுவேதா லஹரி கூறியதாவது:மொத்தம், 12 பக்கங்கள் கொண்ட மாணவர் பதிப்பின் ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யம் தான். உள்ளூர் முதல் உலக செய்திகளை அளிக்கும், 'செய்தி அறிவோம்' பக்கம், மாணவர்களின் அறிவியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும், 'வெங்கியைக் கேளுங்க' பகுதி, 'நம்மைச்சுற்றி நம்மைச்சுற்றி, வெற்றிப்பாதை, விவாதக்களம், செய்து பாருங்கள், மகிழ்ச்சி அரங்கம்' ஆகியவை பயனுள்ளதாக உள்ளன.


மொழி அறிவைக் கூட்டும் ஆக்கங்கள், கணிதத்தைக் கற்பிக்கும் கட்டுரைகள், படிப்பினைத் தரும் வரலாற்றுச் சம்பவங்கள், விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் இரண்டு பக்கங்கள் என, ஏராளமான விஷயங்களை, இந்த இதழில் நாள் தவறாமல் படிக்கிறேன்.முழுக்க வண்ணமயமாகவும், ஓவியங்கள் நிறைந்ததாகவும் இருப்பது, இதன் தனிச்சிறப்பு.இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் பதிப்பு வேண்டுமா!


'தினமலர்' மாணவர் பதிப்பு, நாளை முதல், பள்ளிகள் மூலம் மட்டுமே வினியோகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில், 700க்கும் அதிகமான, சி.பி.எஸ்.இ., மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகள், இதழை மொத்தமாக வரவழைத்து, தங்கள் மாணவர்களுக்கு வினியோகித்து வருகின்றன.


இதேபோல், மற்ற பள்ளிகளும் மாணவர் பதிப்புக்கு சந்தாதாரர் ஆக, உடனே தொடர்பு கொள்ளவும்.சென்னை: பிரகாஷ் - 99443 09681  ஜெயகுமார் - 98843 91342
Auto Scroll Stop Scroll