Thursday, June 14

சிறப்பு ஆசிரியர் ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்வு

''தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும், சிறப்பு 
ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம், 
10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி 
வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.


சுய வேலைவாய்ப்பு
சட்டசபையில், 110 விதியின் கீழ், சமூக நலம் மற்றும் 

சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை 
ஆகியவற்றில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
மதுரையில் செயல்படும், அன்னை சத்தியா அரசு 

குழந்தைகள் காப்பகம், மாநகராட்சி கட்டடத்தில் 
இயங்கி வருகிறது. கட்டடம் பழுதடைந்துள்ளதால், 
புதிய கட்டடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக்குழு 
அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சிக் கூடம், உணவுக் 
கூடம் ஆகியவை, ஐந்து கோடி ரூபாயில் கட்டப்படும்.

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள, 

சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு, 
நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, புதிய கட்டடம், 
நான்கு கோடி ரூபாயில் கட்டப்படும்.நடப்பாண்டு,
 860 அங்கன்வாடி மைய கட்டடங்களை சீர் செய்ய, 
தலா, இரண்டு லட்சம் ரூபாய் வீதம், 17.20 கோடி 
ரூபாய் ஒதுக்கப்படும்.

மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத்திறன், 

செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும், 
தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், சிறப்பு ஆசிரியர்கள் 
மற்றும் பயிற்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு
 வழங்கப்படும் மதிப்பூதியம், 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 
14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 
இதனால், 1,129 பேர் பயன்பெறுவர்.

அரசுக்கு ஆண்டுக்கு, 5.42 கோடி ரூபாய் செலவு 

ஏற்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு 
ஏற்படுத்த, அவர்கள், ஆவின் பால் உற்பத்தி பொருட்கள் 
விற்பனை மையம் அமைக்க, ஆவின் நிறுவனத்திற்கு 
செலுத்த வேண்டிய, டிபாசிட் தொகை, 25 ஆயிரம் 
ரூபாய், மானியமாக வழங்கப்படும்.முதல் கட்டமாக, 
100 பேருக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில், 
இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கூடுதல் செலவு
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ், 301 சிறப்பு 

பள்ளிகள் மற்றும் இல்லங்கள் செயல்படுகின்றன. 
இவற்றில், 11 ஆயிரத்து, 948 மாற்றுத் திறனாளிகள் 
பயன்பெறுகின்றனர்.அவர்களுக்கு மாதந்தோறும் 
வழங்கப்படும், உணவூட்டு மானியம், 650 ரூபாயிலிருந்து, 
900 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 
அரசுக்கு ஆண்டுக்கு, 3.15 கோடி ரூபாய், கூடுதல் 
செலவு ஏற்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Auto Scroll Stop Scroll