Tuesday, May 29

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் 
முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 
அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த 
தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 
8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-
மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் 
எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 
ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.

மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, 
கோவை, மதுரை, பாளையங்கோட்டை, 
திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் 
கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு 
இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.

மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை 
தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை 
அமைக்கப்பட்டிருந்தது.

விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு 
மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் 
பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து 
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) 
காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இந்த தேர்வு முடிவுகளை 
 www.tnr-esults.nic.in, 
www.dge.tn.nic.in, 
www.dge2.tn.nic.in 
என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Auto Scroll Stop Scroll