Tuesday, May 8

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வழிகாட்டும் 'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சி 10ம் தேதி சென்னையில் நடக்கிறது

இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஆன்லைன் விண்ணப்ப முறை 
குறித்த சந்தேகங்களை தீர்க்கும், 'தினமலர்' நாளிதழின், 
'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, வரும், 10ம் தேதி சென்னையில் 
நடக்கிறது. அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 
பங்கேற்க, மே, 3ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது. 
வரும், 30ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 
ஆன்லைன் பதிவு முறையில் மாணவர்களுக்கும், 
பெற்றோருக்கும், பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.


சந்தேகங்களுக்கு தீர்வு : இந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், 

'தினமலர்' நாளிதழ் சார்பில், உங்களால் முடியும், கவுன்சிலிங் 
வழிகாட்டும் நிகழ்ச்சி, சென்னையில் வரும், 10ம் தேதி நடக்கிறது. 
தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில், 
காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி 
நடைபெறும். 'தினமலர்' நாளிதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் 
ஆப் டெக்னாலஜி கல்லுாரி இணைந்து, இந்த நிகழ்ச்சி 
நடத்தப்படுகிறது. இதில், அண்ணா பல்கலையின், தமிழ்நாடு 
இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் ரைமண்ட் உத்தரியராஜ், 
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர் பங்கேற்று, 
மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த ஆண்டு 
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, ஆன்லைன் கவுன்சிலிங்கின் 
நடைமுறைகள் என்ன; விருப்பமான கல்லுாரிகளை, கணினி 
வழியே தேர்வு செய்வது எப்படி. 

கேள்வி - பதில் நிகழ்ச்சி : விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு 

செய்யும் முறை; ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்யும் 
வழிமுறைகள் ஆகியவை குறித்து, அண்ணா பல்கலையின் 
பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ், விரிவான விளக்கம் 
அளிக்கிறார்.இதில், மாணவர்களும், பெற்றோரும் தங்கள் 
ந்தேகங்களை கேட்டு, விளக்கம் பெறலாம். மாணவர்கள்
 மற்றும் பெற்றோருக்கு, கேள்வி - பதில் நிகழ்ச்சியும் இடம் 
பெறும். அதேபோல், இன்ஜினியரிங் கல்லுாரிகளை தேர்வு 
செய்யும் முறை, எந்த துறையில் வேலைவாய்ப்பு மற்றும் 
வளர்ச்சி உள்ளது என்ற விபரங்களை, கல்வி ஆலோசகர் 
ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவிக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியை, ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் 

டெக்னாலஜி மற்றும் ஆனந்த் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்; 
அப்போலோ இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் ரெமோ 
இண்டர்நேஷனர் காலேஜ் ஆப் ஏவியேஷன் ஆகிய கல்வி 
நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.'ரோபாட்டிக்' பயிற்சி 
இலவசம்

நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மாணவர்களில், தேர்வு செய்யப்படும், 

50 பேருக்கு, கட்டணமின்றி இன்ஜினியரிங் படிக்கும் வகையில்,
 ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். மேலும், 1,000 மாணவர்கள் தேர்வு 
செய்யப்பட்டு, அவர்களுக்கு, இலவச ரோபாட்டிக் பயிற்சி 
வழங்கப்படும். அதேபோல், நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து 
மாணவர்களுக்கும், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் 
மற்றும் ஆன்லைன் பதிவுகளை விளக்கும், 'உங்களால் முடியும்' 
கையேடு இலவசமாக வழங்கப்படும்.

Auto Scroll Stop Scroll