Friday, April 27

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் வாபஸ்

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை, இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், ஒரு தரப்பினர், ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில், நான்கு நாட்களாக, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 


அவர்களை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பேச்சு நடத்தினார். 'ஊதிய முரண்பாடுகளை நீக்குவது குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில், ஆசிரியர்கள் முறையிடலாம். மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக, ஊதியம் உயர்த்துவது குறித்து, முதல்வரிடம் பேசி, முடிவு செய்யப்படும்' என, செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை, ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். ஆசிரியர்களின் பிரதிநிதிகள், விரைவில், சித்திக் தலைமையிலான ஒரு நபர் கமிட்டியை சந்தித்து, முறையிட முடிவு செய்துள்ளனர்.
Auto Scroll Stop Scroll