Sunday, April 22

சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் அளவுக்கு புது பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

''புதிய பாடமாற்றங்கள் என்பது, மே மாதத்தில் புத்தகமாக வெளியிடப்படும். சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் அளவுக்கு பாடத்திட்டம் அமையும். தனியார் பள்ளிகளில் பணத்தை விரயம் செய்வதை காட்டிலும், அனைவரும் அரசு பள்ளியில் படிக்கும் நிலையை உருவாக்கி காட்டுவோம்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று துவங்கிய, தனியார் கல்வி கண்காட்சியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார் 412 மையங்களில் பயிற்சி பின் அவர் பேசியதாவது: 'நீட்' தேர்வை ஏன் எதிர்க்கக் கூடாது என கேட்டனர். 'நீட்' தேர்வுக்கு விதி விலக்களிக்க வேண்டும் என, இன்றும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. நீட் தேர்வை எப்படி சந்திப்பது என, தமிழக அரசு வீர நடை போட்டு கொண்டிருக்கிறது. 


தமிழகத்தில், மொத்தம், 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்புஎதையும் சந்திக்கும் ஆற்றலை, மாணவர்களிடம் உருவாக்கும் நோக்கத்தோடு தான், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு உத்தரவு தரும் கல்வி அளிக்கப்படும்.ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பினருக்கு, புதிய பாட மாற்றங்கள் என்பது, மே மாதத்தில் புத்தகமாக வெளியிடப்படும். சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் அளவுக்கு பாடத்திட்டம் அமையும்.தனியார் பள்ளிகளில் பணத்தை விரயம் செய்வதை காட்டிலும், அனைவரும் அரசு பள்ளியில் படிக்கும் நிலையை உருவாக்கி காட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
Auto Scroll Stop Scroll