Thursday, February 22

ஜாக்டோ - ஜியோ மறியல் :ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை: ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், மறியல் போராட்டம், நேற்று நடந்தது. தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த, ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்றனர்.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 2016 ஜனவரி முதல், ஊதிய உயர்வை அமல்படுத்தி, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாடுகளை களைவது ஆகிய, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது. சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் திரண்ட, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை, போலீசார் கைது செய்து, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்கு, அழைத்து வந்தனர். இந்நிலையில், வகுப்புகளை, 'கட்' அடித்து, ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது பெயர் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
Auto Scroll Stop Scroll