Wednesday, January 10

பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தென்னரசு பேசுகையில், ''இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துகள்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால், ''என் சார்பிலும், அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும், அமைச்சருக்கு வாழ்த்துகள்,'' என்றார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Auto Scroll Stop Scroll