Friday, January 12

இன்ஜி., கல்லூரி ஜன.,12 தேர்வு, ஜன.,22ம் தேதிக்கு தள்ளி வைப்பு

பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், ஜன.,12 வரை தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், பஸ் போக்குவரத்து பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மட்டும், இன்று முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும், 17ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.


இதையடுத்து, அண்ணா பல்கலை உட்பட அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும், இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன. 'அண்ணா பல்கலையில், இன்று நடக்கவிருந்த தேர்வுகள், வரும், 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன; 18ம் தேதியில், தேர்வு எதுவும் நடக்காது' என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா, அறிவித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll