Tuesday, December 26

ராணுவ ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு 818 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ தொகுதியின் கீழ் அடங்கியுள்ள கிளார்க், ஸ்டெனோகிராபர், தீயணைப்பு வீரர்கள், உதவியாளர்கள், பிட்டர், டெய்லர், பெயின்டர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், சமையல் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிடங்களின் மொத்த காலி எண்ணிக்கை 818. இடஒதுக்கீடுப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். www.aocrecruitment.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Auto Scroll Stop Scroll