Saturday, November 25

ஆசிரியருக்கு மிரட்டல்: மாணவன் கைது

ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவரை, போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காந்தி நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 16 வயது மாணவர், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளிக்கு சரியாக வருவதில்லை. இதனால், வகுப்பு ஆசிரியர் முருகையன், 41, மாணவரை கண்டித்து உள்ளார்.



ஆத்திரமடைந்த மாணவர், நேற்று முன்தினம், வகுப்பறையில் இருந்த ஆசிரியரை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆசிரியர் முருகையன், குடியாத்தம் போலீசில் புகார் செய்தார். மாணவரை கைது செய்த போலீசார், சென்னையில் உள்ள அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் நேற்று அடைத்தனர்.
Auto Scroll Stop Scroll