Sunday, November 26

தனக்குத் தானே செருப்பால் அடித்து அரசு பணியாளர்கள் நூதன போராட்டம்

தனக்குத் தானே செருப்பால் அடித்து அரசு பணியாளர்கள் நூதன போராட்டம்

புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் 1,311 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பளமும், மாதம் ஒன்றுக்கு 16 நாள் வேலையும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பளத்தை நாளொன்றுக்கு ரூ.398 ஆக உயர்த்த வேண்டும். வேலைநாட்களை 26 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுக்கு நீண்ட நாட்களாக விடுத்து வரும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று வவுச்சர் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் வள்ளி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர். இந்தநிலையில் அவர்களில் சிலர் தனக்குத்தானே செருப்பால் அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Auto Scroll Stop Scroll