Saturday, November 4

நான்கு மாவட்டங்களில் இன்று ( நவ.,4 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(நவ.4) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில்இன்று( நவ.,4 )பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன்,சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll