Tuesday, October 10

காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை தெரிவித்துள்ளதாவது: பல்கலையின் அனைத்து இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,க்கான தேர்வுகள் டிச.,20, அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ், டிப்ளமோ, பி.ஜி., டிப்ளமோ படிப்புகளுக்கு டிச.,27, எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்பிற்கு ஜன.,3 முதல் தேர்வுகள் துவங்குகின்றன. 


இத்தேர்வுகளுக்கு அக்.,20க்குள் அபராதமின்றியும், அக்.,27க்குள் ரூ.100 அபராதத்துடனும்,நவ.,6க்குள் ரூ.300 அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு கட்டணம் எஸ்.பி.ஐ., வங்கி ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். கட்டண ரசீதை விண்ணப்பத்துடன்இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll