Saturday, September 30

மோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு

பிரதமர், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம், அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

தலைநகர், வாஷிங்டனில், பிரதமர், மோடியின் வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. 'தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற இந்த புத்தகம், இந்தாண்டு, ஜூலையில், இந்தியாவில் வெளியிடப்பட்டது. புத்தகத்தின் பிரதியை, அமெரிக்க, எம்.பி.,க்கள், மார்கன் கிரிப்பித், தாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்;

மோடியின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். புத்தகத்தில், மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின், சந்தித்த சவால்கள், செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் குறித்து படங்களும் இடம்பெற்று உள்ளன. 

இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பான, 'சுலாப்'பின் நிறுவனர், பின்டேஸ்வர் பதக், புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''மோடி, அரசியலில் அடிமட்டத்திலிருந்து வந்த தலைவர்; இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக உள்ளார். ''அவரது தலைமையின் கீழ், 2019க்குள் இந்தியா, 100 சதவீதம் துாய்மை பெறும்,'' என, தெரிவித்தார்.

ஆளும் குடியரசு கட்சியின், பேர்பேக்ஸ் மாகாண பிரதிநிதி, மேட் ஏம்ஸ், வெளிநாடு வாழ், பா.ஜ., நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த, அடப்பா பிரசாத் ஆகியோர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
Auto Scroll Stop Scroll