Wednesday, August 9

'சி.பி.எஸ்.இ., பாடத்தை தமிழக பாடத்திட்டம் மிஞ்சும்'

''சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம் தயாரிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், தமிழக அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மற்றும், 'சென்னை - 2000 பிளஸ்' ஆகி யவை இணைந்து, சென்னையின் வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த, தொடர் சொற் பொழிவு, நேற்று துவங்கியது. 


இதை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:
ஒரு அரசு துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழக பள்ளிக் கல்வி துறை செயல்படுகிறது. நுழைவு தேர்வு களுக்கு, மாணவர்களை தயார்படுத்த, 450க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் அமைக்கப் படும். அவற்றில், சனிக்கிழமை தோறும், மூன்று மணி நேரம் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். 54 ஆயிரம் வினா - விடைகள் அடங்கிய, 'சிடி'க்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்.


மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில், புதிய பாடத்திட்டம், மூன்று மாதங்களில் தயாராகி விடும். அதில், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வரலாறு ஆகியவை இடம் பெறும். நல்லொழுக்க கல்வியும், உடற்கல்வியுடன், யோகாவும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறும். ஐந்தாம் வகுப்பு வரை; 6 வகுப்பு முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு என, தனித்தனி யாக, மூன்று வகை சீருடைகள் வழங்கப்படும். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு, இரண்டு சீருடை களுடன், இரண்டு சீருடைகளுக்கான துணியையும், அரசு கூடுதலாக வழங்கும். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட, தொல்பொருட்களை காட்சிப் படுத்த, 1 கோடி ரூபாயில், அருங்காட்சியகம் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதில், அருங்காட்சியகங்கள் துறையின் இயக்குனர், டி.ஜெகந்நாதன், அறநிலைய துறை முதன்மை செயலர், அபூர்வா வர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

'நான் நேர்மையாக செயல்படுகிறேன்!' :பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கு, பாடவாரியான மதிப் பெண், 200ல் இருந்து, 100 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு, மாதிரி வினாதாள் வழங்கி,சிறப்பு பயிற்சி அளிப்ப தால், இந்ததேர்வு, மாணவர்களுக்கு மன உளைச் சலை ஏற்படுத்தாது.பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரத்தில், நான் நேர்மை யாக செயல்படுகிறேன். பள்ளிகளை தரம் உயர்த்து வதற்கு தடையின்மை சான்றை அரசு வெளிப் படையாக வழங்கி உள்ளது. என கூறினார்.
Auto Scroll Stop Scroll