Tuesday, July 25

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் பாலியல் புகார் தெரிவிக்க புது வசதி

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை ஆன் லைனில் தெரிவிக்கும் வசதியை (ஷி பாக்ஸ் - SHe box) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று தொடங்கியுள்ளது.
டெல்லியில் இதனை நேற்று தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியதாவது:
மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் தங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் இருந்தால் அதனை (ஷி பாக்ஸ்- SHe box) இணைய வழியில் பதிவு செய்யலாம். இணைய வழியாக புகாரை அனுப்பும்போது, அது சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறை, அலுவலகத்தில் இயங்கும் விசாரணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தக் குழு விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
Auto Scroll Stop Scroll