Tuesday, July 25

கோவை அரசுப் பள்ளியில் ‘தி இந்து’வின் வெற்றிக்கொடி வாசிப்பு வழிகாட்டி இயக்கம் தொடக்கம்

கோவையில் ‘தி இந்து’ நாளிதழும், மக்கள் சேவை மையமும் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வெற்றிக்கொடி வாசிப்பு வழிகாட்டி இயக்கத்தைத் தொடங்கியுள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களிடையே நாளிதழ் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சி, கோவை தொண்டாமுத்தூரில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளியில் நேற்று நடைபெற்றது. மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவியர் 200 பேருக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பிரதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 100 நாட்களுக்கு இதுபோல நாளிதழ் பிரதிகளை மாணவர்களுக்கு வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றிக்கொடி வாசிப்பு வழிகாட்டி தொடக்க நிகழ்ச்சியில், மக்கள் சேவை மையத்தின் தலைவரும், பாஜக மாநில பொதுச் செயலாளரும், தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவியுமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்றார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பிரதிகளை மாணவர்களுக்கு வழங்கி அவர் பேசியதாவது:
சமூக பங்களிப்பு
‘தி இந்து’ குழுமத்தைப் பொறுத்தவரை பத்திரிகை விற் பனை மட்டும் அவர்களுக்கு முக்கியமல்ல. சுதந்திரப் போராட்ட காலத்துக்கு முன்பிருந்தே ‘தி இந்து’ நாளிதழ் சமூகப் பங்களிப்பை அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெற்றிக்கொடி வாசிப்பு இயக்கத்தை தொடங்கி யுள்ளனர். ஒருவகையில் நாம் செய்ய வேண்டியிருந்த வேலையை இந்த இயக்கம் குறைத் துள்ளது. அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துகளை தெரிந்து கொள்வதற்காகவே ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க கட்டுரை களை விரும்பிப் படிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக தர மான செய்திகள், வாசிப்பை மேம்படுத்துகின்றன.
அரசுப் பள்ளியில் படிப்பதை தாழ்வு மனப்பான்மையோடு எண்ண வேண்டியதில்லை. சரி யான வாசிப்புப் பழக்கம் இருந் தால், அந்த எண்ணத்தை எளிதில் கடந்து சென்று விடலாம். வாசிப்பே முழுமையான மனிதனாக மாற்றி, உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும்.
நாளிதழ் வாசிப்பு அவசியம்
வாசிப்பை ஊக்குவிக்க ஆசிரியர்கள் தயாராக வேண்டும். வாசிப்பை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். போட்டித் தேர்வு, உயர் கல்வி நுழைவுத் தேர்வு, வேலைவாய்ப்பு என பல வகைகளில் மாணவர்களுக்கு நேரடியாக உதவக் கூடியவை நாளிதழ்கள். படிக்கும் பழக்கம் கைகூடிவிட்டால், நூலகங்கள் நிரம்பி வழியும். அறிவுக்கான தேடலில் பாடப் புத்தகம் என்பது ஒரு வழி மட்டுமே. பலதரப்பட்ட வாசிப்பு பல வழிகளில் உங்களை அழைத்துச் செல்லும் என்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் த.ராணி நன்றி தெரிவித்தார்.
Auto Scroll Stop Scroll