Wednesday, June 7

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

''வெயில் தாக்கம் குறையாததால், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்,'' என, அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். 


இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசித்த பின் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:விடுமுறை விடாமல் பள்ளியை தொடர்ந்து நடத்தினால் தான், ஓராண்டு பாடங்களை நடத்தி முடிக்க முடியும். கடந்த ஆண்டு மழை பெய்யாததால், மழை விடுமுறை விடப்படவில்லை. இந்த ஆண்டு, கனமழை இருக்கும் என, கூறப்படுகிறது. 


விடுமுறை விட்டால், சனிக்கிழமை தோறும் பள்ளிகள் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருந்தும், கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுப்பதாலும், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும், 12ல், பள்ளிகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Auto Scroll Stop Scroll