Saturday, May 13

திருச்சி வாலடி- பொன்மாலை இரட்டை தண்டவாள பணி.... 10 நாட்களுக்கு ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு

திருச்சி ரயில் நிலையம் வழியாக செல்லும் சில ரயில்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மாற்று பாதையில் செல்லும்படியாகவும், தாமதமாக செல்லும்படியாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் ரயில்கள் மே மாதம் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நேரம் மாற்றியமைக்கப்பட்டும், வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.


ரயில் எண்: 16352, நாகர்கோவில்- மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் வாரத்தில் ஞாயிறு மற்றும் வியாழன் (மே 14, 18) ஆகிய இரு முறை மட்டுமே இயங்கும் ரயில் நாகர்கோவிலிருந்து 6.10 மணிக்கு அதாவது, 70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். 

ரயில் எண் : 56821, மயிலாடுதுறை- திருநெல்வேலி பயணிகள் ரயில் மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி இடையே மே 18, 19, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படும். 

ரயில் எண் : 56822, திருநெல்வேலி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருச்சிராப்பள்ளி- மயிலாடுதுறை இடையே மே 18, 19, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படும். 

ரயில் எண் : 16127, சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு ரயில் மே 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து 9.25 மணிக்கு (70 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். 

ரயில் எண் : 16352, நாகர்கோவில்- மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் வாரத்தில் இரு முறை இயங்கும் ரயில் நாகர்கோவிலிருந்து 21-ஆம் தேதி அன்று 7 மணிக்கு (2 மணி நேரம் தாமதம்) புறப்படும். 

ரயில் எண்: 12636, மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பிரதான ரயில் பாதை வழியாக இயங்க மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 23-ஆம்தேதி மதியம் 1.30 மணி அளவில் விழுப்புரத்தை அடையும். 

ரயில் எண்: 16127, எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலம், சேலம், கரூர், திருச்சி வழியாக வரும் 23-ஆம் தேதி 205 நிமிடங்கள் தாமதமாக திருச்சிக்கு வந்தடையும். 

ரயில் எண்: 15120, உ.பி. மாநிலம் மண்டுவாடியா- ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர ரயில் வரும் 23-ஆம் தேதி 1 மணி நேரம் தாமதமாக திருச்சியை சென்றடையும். 

ரயில் எண்: 16128, குருவாயூர்- சென்னை எழும்பூர் ரயிலானது திருச்சி, கரூர், சேலம், விருத்தாசலம் வழியாக திருச்சியை வரும் 23-ஆம் தேதி 205 நிமிடங்கள் தாமதமாக வரும்.
Auto Scroll Stop Scroll