Saturday, April 1

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு:நள்ளிரவு முதல் அமல்

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.77 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாவது: இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஜனவரி15க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.28 காசுகளுக்கு விற்பனையாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Auto Scroll Stop Scroll