Monday, March 6

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளன
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Auto Scroll Stop Scroll