Tuesday, March 7

சி.பி.எஸ்.இ., தேர்வு; வரும், 9ல் துவக்கம்

திருப்பூர்: பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, வரும், 9ம் தேதி துவங்குகிறது.

சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், வரும், 9ம் தேதி துவங்கி, ஏப்., 29ல், நிறைவடைகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 21 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இருந்து, மொத்தம், 581 மாணவ, மாணவியர், இத் தேர்வை எழுத உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்துக்கான பொதுத்தேர்வு மையமாக, கே.எம்.சி., பப்ளிக் பள்ளி, கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது.நடப்பாண்டும், இப்பள்ளியை, திருப்பூர் மாவட்ட தேர்வு மையமாக, மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. 

Auto Scroll Stop Scroll