Friday, February 3

TNPSC:பரிசோதகர் பதவி: பிப்., 9ல் நடக்கிறது சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழக தொழில் துறையில், பரிசோதகர் பதவிக்கு, பிப்., 9ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழில்கள் சார்நிலை பணியில் அடங்கிய, பரிசோதகர் மற்றும் உதவி பரிசோதகர் பதவிகளுக்கு, ஆறு காலியிடங்களுக்கு, 2016, ஜூனில் தேர்வு நடந்தது.
இதில், பங்கேற்ற தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் விதிகள் அடிப்படையில், தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, பிப்., 9ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll