Wednesday, February 1

7-ந்தேதி நடக்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 28-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

மத்திய அரசின் ரூ.500 ரூ.1,000 செல்லாது என்று அறிவிப்பை 
தொடர்ந்து ஏ.டி.எம்.களில் பொதுமக்களுக்கு தேவையான
 பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. முழுமையாக 
பொதுமக்களுக்கு பணம் கிடைக்க வேண்டிய நடவடிக்கை 
மத்திய அரசு எடுக்க வேண்டும். வராக்கடனை வசூலிக்க 
கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும். பொதுமக்களை 
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டாயப்படுத்த கூடாது. 

ரூ.1.75 லட்சம் கோடி யாருக்கு வராக்கடன் தள்ளுபடி 
செய்யப்பட்டது என்பதை அறிவிக்க வேண்டும். வங்கிகளுக்கு 
போதுமான நிதியை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும் உள்ளிட்ட
 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி
ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், 
வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆகியவை சார்பில் 7-ந்தேதி 
(செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை 
நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தது.

வேலை நிறுத்தம் ஒத்திவைப்புஇந்தநிலையில் 9 வங்கி ஊழியர்கள் சங்கம் இதே கோரிக்கையை 

வலியுறுத்தி வ 28-ந்தேதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு 
விடுத்துள்ளது.

இதனால் 7-ந்தேதி நடக்க இருந்த வேலைநிறுத்தம் 28-ந் தேதிக்கு

 தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் 
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு
 வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள், 
அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில் 

தமிழ்நாடு பொதுசெயலாளர் கிருஷ்ணன், அகில இந்திய 
வங்கி ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் வெங்கடாச்சலம் 
ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Auto Scroll Stop Scroll