Saturday, January 21

போராட்ட களத்தில் போலீசின் பரபரப்பு பேச்சு

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில், சீருடையில் இருந்த, போலீசார் இருவர், திடீரென, 'மைக்' பிடித்து, உணர்ச்சி பெருக்குடன் பேசியதால், அவர்களை இளைஞர்கள் கட்டித் தழுவி நன்றி தெரிவித்தனர்.
சென்னை, மெரினா கடற்கரையில், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை, 9:00 மணியளவில், ஆயுதப்படை காவலர் மாயழகன், போக்குவரத்து தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் பேச விரும்பினர்.


அப்போது, போராட்ட களத்தில் இருந்த இளைஞர்கள், 'சீருடையில் இருக்கிறீர்களே; அதிகாரிகளால் பாதிப்பு நேரிடப் போகிறது' என்றனர். அதற்கு அந்த போலீசார், 'அவர்களும் தமிழர்கள் தான்; ஜல்லிக்கட்டு நடக்காதா என, ஏங்குபவர்கள். எங்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்க மாட்டார்கள்' என, தெரிவித்தனர்.

பின், போலீஸ்காரர் மாயழகன் பேசியதாவது:

தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் கூட இருக்க லாம்; ஆனால், பசும்பால் குடிக்காத குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லை.ஆண்டாண்டு காலமாக, நம் முன்னோர்கள் கொண்டாடி வந்த, ஜல்லிக்கட்டை திடீரென தடுப்பதற்கு, 'பீட்டா' யார்?

நம் பாரம்பரியத்தை, அன்னிய சக்திகள் அழித்து வருகின்றன. காளைகளை அழித்து விட்டால், பாலுக்கு, அன்னிய நாட்டினரிடம் பிச்சை எடுக்க வேண்டி இருக்கும். தமிழன் முன்வைத்த காலை, பின்வைக்க மாட்டான்.

பல்லாயிரக்கணக்கில் திரண்டு, நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், ஈடுபட்டு இருக்கிறீர் கள். உங்களுக்கு அருகில் இருக்கும் போலீசாரும், தமிழர்கள் தான். சீருடை பணியை 

போக்குவரத்து தலைமை காவலர் விஜயகுமார் ,பேசுகையில், ''நம் தேசியக் கொடிக்கு அடுத் ததாக மேற்கொண்டு இருப்பதால், வெளிப்படை யாக பேச முடியாமல் தவிக்கின்றனர்.


அவர்கள் சார்பில் பேசுகிறேன்.இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். இன்னும் சில தினங்களில், ஜல்லிக்கட்டு நடந்தே தீர வேண்டும். நான் தமிழனாக, இந்த போராட்ட களத்தில், சீருடையுடன் பங்கேற்றுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.போராட்ட களத்தில் இருக்கும் உங்கள் உணர்வுகளுக்கு, என் ராயல் சல்யூட்,'' என்றார்.
போலீஸ் மீது நடவடிக்கையா?

சீருடையில் இருந்த போலீசார், போராட்டக்காரர்கள் மத்தியில் பேசியதால், அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்பது குறித்து, இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்டபோது, 'காவல் துறையில் இருப்பவர் களும் மனிதர்கள் தானே; தமிழன் என்ற உணர் வில் பேசி விட்டனர். 

இது, முன்மாதிரி யாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, எச்சரிக்கை மட்டும் விடப்பட்டு ள்ளது; நடவடிக்கை ஏதுமில்லை' என்றனர்.
Auto Scroll Stop Scroll