Thursday, January 5

இலவச சைக்கிள் : முதல்வர் வழங்கினார்

பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில், 243 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.70 லட்சம் மாணவர்கள்; 3.49 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, தலைமை செயலகத்தில், ஏழு மாணவர்களுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், இலவச சைக்கிள் வழங்கி வாழ்த்தினார்; தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Auto Scroll Stop Scroll