Wednesday, January 4

தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள்; இறுதிப் பட்டியல் நாளை வெளியீடு

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை அடுத்து தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடபடுகிறது.

இதுகுறித்து, தேர்தல் ஆணையம் கூறியருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2017-ன் இறுதிப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. 2016-ம் ஆண்டை காட்டிலும் 2017-ல் 10.22 லட்சம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி பேர் , பெண் வாக்காளர்கள் 2.99 கோடி பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,040 பேர். மொத்த வாக்காளர்கள் 5.92 கோடி பேர். 


அடையாள அட்டை
ஓட்டுசாவடி அலுவலர்கள் மூலம் பிப்.,10-ம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலை http// elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் காணலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 


Auto Scroll Stop Scroll