Tuesday, November 1

பள்ளிகளில் கட்டாய யோகா; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

நாடு முழுவதும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 
பொது நல மனு:
மூத்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், என்.சி.டி.இ., சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., போன்றவற்றிற்கு சுபரீம் கோர்ட் இட வேண்டும். தேசிய யோகா கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்.
அடுத்த வாரம் விசாரணை:
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையை சுகாதார தினமாக அனுசரிப்பதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது சுப்ரீம் கோர்ட் வரும் 7ம் தேதி (நவ.,7) விசாரணை நடத்தவுள்ளது.
Auto Scroll Stop Scroll