Friday, November 4

யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது பெரியார் பல்கலை

சேலம்பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது. 
அதில்இளங்கலைமுதுகலைடிப்ளமோ,சான்றிதழ் உள்ளிட்ட, 150 படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 188, அண்டை மாநிலங்களில், 105,அண்டை நாடுகளில்மூன்று என, 295 படிப்பு மையங்கள் செயல்படுகின்றன.
எச்சரிக்கை
அதில்அண்டை நாடுகள் மற்றும் மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களை நடத்தக்கூடாது என,யு.ஜி.சி.உத்தரவிட்டது. 
மேலும்விதிக்கு மாறாகதனியார் நிறுவனங்களுடன் இணைந்துபடிப்புகளை வழங்கியதால்பெரியார் பல்கலை தொலைதூர படிப்புகளில்மாணவர்கள் சேர வேண்டாம் எனசில மாதங்களுக்கு முன்யு.ஜி.சி.,எச்சரித்தது.
ஆதரவு
இதனால்பெரியார் பல்கலைதொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. பல்கலை சார்பில்நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறுசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
அதில்பல்கலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்அதனால்நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது எனபல்கலை அறிவித்துள்ளது.
தொடரலாம்
பிரைடு இயக்குனர் பாலகுருநாதன் கூறுகையில்மற்ற பல்கலைகளில் பின்பற்றும் விதிமுறைப்படி,பெரியார் பல்கலையில்நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடரலாம் எனதீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
இதனால்பெரியார் பல்கலைதொலைநிலை கல்வி மையத்தில்நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியதுஎன்றார். தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை நடத்தபல்கலை மானியக்குழு விதித்த தடைக்குபெரியார் பல்கலைநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால்நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
Auto Scroll Stop Scroll