Wednesday, November 30

'பிளைவுட்' தயாரிக்க பயன்படுத்தப்படும் பழைய ரூபாய் நோட்டுக்கள்

மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்ட பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் தற்போது பிளைவுட் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு பதிலாக புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.23,000 கோடி மதிப்பிலான ரூ.500, 1000 நோட்டுக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்டது. 



லட்சக்கணக்கான இந்த ரூபாய் தாள்களை எரிப்பதற்கு பதிலாக வேறு வழியில் பயன்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த பழைய நோட்டுக்களை கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள (வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட் Western India Plywood -WIPL) நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 140 டன்னுக்கும் அதிகமான பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் இந்த நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை மிஷின்கள் மூலம் அரைத்து, அதனை கூழாக்கி, பிளைவுட் செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.


ஒரு வாரத்திற்கு 40 டன் பயன்பாடற்ற ரூபாய் நோட்டுக்களை இந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அளித்து வருகிறது. இதற்காக டன் ஒன்றிற்கு ரூ.250 ஐ இந்நிறுவனம் ரிசர்வ் வங்கிக்கு விலையாக தருகிறது. சோதனை முயற்சியாக பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய 10 முதல் 15 பைகள் அரைக்கப்பட்டு,பிளைவுட் தயாரிப்பதற்கான கூழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll